மஞ்சுமெல் பாய்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி! குழப்பத்திற்கு பின் உறுதியான தேதி
மலையாள சினிமா துறையில் இருந்து சமீப காலமாக தொடர்ந்து ஹிட் படங்களாக வந்து கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி ரிலீஸ் ஆன மஞ்சுமெல் பாய்ஸ் மிகப்பெரிய ஹிட் ஆனது.
தமிழ்நாட்டின் கொடைக்கானலில் எடுக்கப்பட்ட படம் இது என்பதால் தமிழ்நாட்டிலும் பெரிய அளவில் படம் ஹிட் ஆனது. 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பெரிய சாதனை படைத்தது இந்த படம்.
ஓடிடி ரிலீஸ்
மஞ்சுமெல் பாய்ஸ் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று தான் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஓடிடி ரிலீஸ் தேதி பற்றி பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்தது. படத்தின் ஓடிடி உரிமையை பெரிய தொகைக்கு விற்பனை செய்ய படக்குழு முயற்சித்து வந்ததால் தான் இத்தனை குழப்பம்.
இந்நிலையில் வரும் மே 3ம் தேதி மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஹாட்ஸ்டாரில் வெளிவர இருக்கிறது. இதை பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
