மாஸ் ஹிட்டான மஞ்சும்மல் பாய்ஸ் OTTயில் ரிலீஸ் ஆகிறது- எப்போது தெரியுமா?
மஞ்சும்மல் பாய்ஸ்
சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் பல இளம் கலைஞர்கள் நடிக்க சமீபத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ்.
மலையாளத்தில் பிப்ரவரி மாதம் வெளியான இப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள். உலகம் முழுவதும் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டுமே படம் ரூ. 60 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் என்ற சின்ன கிராமத்தைச் சேர்ந்த 11 நண்பர்கள் குழு ஒன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறது. அதில் ஒருவர் குணா குகையில் தவறி விழுந்து விடுகிறார்.
அவரை அவரது நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் கதை.
OTT ரிலீஸ்
திரையரங்குகளில் சக்கை போடு போட்ட இப்படம் வரும் மே 5ம் தேதி முதல் OTT தளத்தில் வெளியாக இருக்கிறதாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது.

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
