திடீர் என மயங்கி விழுந்த தயாநிதி அழகிரி, மருத்துவமனையில் அனுமதி- மூளை பாதிப்பு
தயாநிதி அழகிரி
இவரை அஜித்தின் மங்காத்தா பட தயாரிப்பாளர் என தான் மக்கள் முதலில் அடையாளப்படுத்துவார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு 36 வயதாகிறது.
திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் இவருக்கு நேற்று திடீரென உடல்நிலை மோசமானதாக தெரிகிறது. இதனால் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தனது அண்ணன் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உடனே சென்று மருத்துவமனையில் அவரை சந்தித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
என்ன ஆனது
அவருக்கு மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், மூளை பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
மூளைக்கு செல்லும் ரத்த நரம்புகளில் அடைப்பு இருக்கிறதாம், பிரைன் அட்டாக் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
ஆனால் மக்கள் அவருக்கு சீக்கிரம் குணமாக வேண்டும் என பிராத்தனை செய்வதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
