ரீ ரிலீஸில் வசூலை வாரிக்குவிக்கும் அஜித்தின் மங்காத்தா.. பாக்ஸ் ஆபிசில் வேட்டை
மங்காத்தா
என்றுமே தமிழ் சினிமாவின் மாஸ் ஓப்பனிங் என்றால் அது அஜித் திரைப்படத்திற்குத்தான். அதனால்தான் அவரை கிங் ஆஃப் ஓப்பனிங் என ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

அஜித்தின் திரை வாழ்க்கையில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், மாபெரும் அளவில் வெற்றிபெற்ற டாப் 5 படங்களில் ஒன்று மங்காத்தா. அதுவும் அப்படம் அஜித்தின் 50வது திரைப்படமாகும்.
வசூல் வேட்டை
2011ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற இப்படத்தை தற்போது 15 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் செய்துள்ளனர். கடந்த வாரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில், உலகளவில் 5 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் இப்படம் இதுவரை ரூ. 18.5 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த 2026–27 பட்ஜெட் - புதிய நலத்திட்டங்கள் என்னென்ன? IBC Tamilnadu
சில நிமிடங்களில் 30,000 பேரைக் கொன்ற கொடிய எரிமலை... பல தசாப்த கால அமைதிக்குப் பிறகு மீண்டும் News Lankasri