ரீ ரிலீஸில் முதல் நாள் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
மங்காத்தா
அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி 2011ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா. இப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 15ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.

அஜித் ரசிகர்கள் எப்போது மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆகும் என்றுதான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று ரீ ரிலீஸான மங்காத்தா படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.
படம் பார்த்த ரசிகர்கள் பலரும், அஜித்தை நாங்கள் இப்படித்தான் பார்க்க ஆசைப்படுகிறோம் என தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
வசூல்
இந்த நிலையில், ரீ ரிலீஸில் முதல் நாள் மங்காத்தா படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் இந்திய அளவில் ரூ. 5.50 கோடி வசூல் செய்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 5 கோடி வசூலித்துள்ளது.

இதுவரை தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸான படங்களிலேயே முதல் நாள் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை மங்காத்தா படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது