மங்காத்தா ரீ ரிலீஸ்.. ப்ரீ புக்கிங்கில் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
மங்காத்தா
அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம் மங்காத்தா. இது அவருடைய 50வது திரைப்படம் என்பதை விட, இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் பிளாக்பஸ்டர் படமாகவும் உள்ளது.

இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க ஆக்ஷன் கிங் அர்ஜுன் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக நடித்திருந்தார். மேலும் திரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி, லட்சுமி ராய் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
ரீ ரிலீஸ்
இப்படம் வெளிவந்து கிட்டதட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன நிலையில், வருகிற 23ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர். சமீபகாலமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் பெருகி வரும் நிலையில், மங்காத்தா படம் எப்போது ரீ ரிலீஸ் ஆகும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர்.

இதனால் கண்டிப்பாக ரீ ரிலீஸில் மங்காத்தா மாபெரும் வசூல் வேட்டை நடத்தும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த நிலையில், இதுவரை நடந்துள்ள ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 10 லட்சம் வசூல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.