ரசிகர்கள் கோட்டையில் சம்பவம் செய்த மங்காத்தா ரீ ரிலீஸ்.. ரெகார்ட் பிரேக்
மங்காத்தா ரீ ரிலீஸ்
கில்லி, சச்சின், படையப்பா, Friends படங்களின் ரீ ரிலீஸை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தது மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸுக்காக தான்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மங்காத்தா படம் வருகிற 23ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் ரீ ரிலீஸ் ஆகிறது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பின் ரீ ரிலீஸ் செய்யப்படும் மங்காத்தா படம் முன்பதிவில் இதுவரை ரூ. 1.5 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் அமர்க்களம் செய்து வருகிறது.
ரெகார்ட் பிரேக்
இந்நிலையில், டிக்கெட் புக்கிங்கில் மாபெரும் ரெகார்ட் பிரேக் செய்துள்ளது மங்காத்தா. சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கத்தை ரசிகர்களின் கோட்டை என கூறப்படுகிறது.

இந்த ரோகிணி திரையரங்கில் இதுவரை நடந்த முன்பதிவில் மங்காத்தா 20000+ டிக்கெட்ஸ் புக் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாபெரும் சாதனையை ரீ ரிலீஸில் மங்காத்தா படம் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.