மங்காத்தா முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல் இத்தனை கோடியா.. அடேங்கப்பா
மங்காத்தா
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி 2011ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா.
இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

2011ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆன இப்படத்தை 15 ஆண்டுகள் கழித்து இன்று ரீ ரிலீஸ் செய்துள்ளனர்.
வசூல்
இந்த நிலையில், ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள மங்காத்தா படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் மட்டுமே ரூ. 4.15 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 3 கோடி வசூல் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்மூலம் ரீ ரிலீஸ் படங்களிலேயே மங்காத்தா மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.