மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ் தேதியில் இதை கவனித்தீர்களா.. அட, இப்படியொரு ஒற்றுமையா
மங்காத்தா
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி 2011ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா. இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தை தற்போது 15 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் செய்கின்றனர். வருகிற 23ஆம் தேதி மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆவதை தொடர்ந்து முன்பதிவு பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை ரூ. 1.5 கோடி முன்பதிவில் வசூல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை கவனித்தீர்களா
மங்காத்தா படம் அஜித்தின் 50வது திரைப்படம் என்பதை நாம் அறிவோம். 2011ஆம் ஆண்டு இப்படத்தை 31.08.11 தேதியில் ரிலீஸ் செய்துள்ளனர். இதை கூட்டினால் 50 வரும். இதை அப்போதே ரசிகர்கள் பலரும் கூறினார்கள்.

தற்போது மங்காத்தா படம் 23.01.26 தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. இதை கூட்டினாலும் 50 வருகிறது. இது தற்செயலாக நடந்ததா? அல்லது இதன்மூலம் படக்குழு ஏதாவது சொல்ல வருகிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.