மன்மதன் படத்தில் சிம்புவுக்கு பதிலாக நடித்திருக்க வேண்டிய நடிகர் ! பேட்டியில் தெரியவந்த ரகசியம்..
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் மன்மதன், இப்படத்தை நடிகர் சிம்புவே இயக்கி நடித்திருந்தார்.
பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் தான் அப்போது சிம்புவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது.
மேலும் இப்படத்தில் நடிகர் சிம்பு இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பிரபல நடிகரான கூல் சுரேஷ் நமது சினிஉலகத்திற்கு அளித்த பேட்டியில் இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது "மன்மதன் படத்தில் அந்த மொட்ட மதன் கதாபாத்திரத்தை நான் தான் பண்ண வேண்டியது. படம் ஆரம்பிக்கும்போது அந்த கதாபாத்திரம் வேறமாதிரி இருந்தது.
பிறகு போக போக அந்த கதாபாத்திரத்தை நானே பண்றேன் என சிம்பு சொன்னார். அவர் கதாபாத்திரத்தில் அவர் நடித்ததால் பவரான ரோல் ஆகிவிட்டது" என கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.