இயக்குனர் முத்தம் கொடுத்த சர்ச்சை.. நடிகை முதல்முறையாக கொடுத்த விளக்கம்
நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் நடிகை மன்னாரா சோப்ரா தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து இருக்கிறார். Thiragabadara Saami என்ற அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அந்த பட இயக்குனர் AS ரவி குமார் சவுத்ரி நடிகை மன்னாராவின் கன்னத்தில் எதிர்பாராத விதமாக முத்தம் கொடுத்துவிட்டார். அதற்கு நடிகை ஷாக் ஆனலும் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல் சிரித்து கொண்டு தான் இருந்தார்.
சர்ச்சைக்கு நடிகையின் பதில்
அந்த முத்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரல் ஆகி பெரிய சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் நடிகை மன்னாரா சோப்ரா ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து இது பற்றி பேசி இருக்கிறார்.
"அவர் முத்தம் கொடுத்தது நானும் எதிர்பார்க்காதது தான். அவர் excitementல் அப்படி செய்துவிட்டார். என்ன செய்கிறோம் என தெரியாமல் excitementல் சிலர் செய்துவிடுவார்கள். ஆனால் அவர் தவறான எண்ணத்தில் அப்படி செய்யவில்லை" என மன்னாரா சோப்ரா கூறி இருக்கிறார்.
மன்னாரா விளக்கம் கொடுத்து இருக்கும் வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.