குக் வித் கோமாளியில் இன்று எலிமினேட் ஆன முக்கிய போட்டியாளர்! எதிர்பார்க்காத ஒருவர்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களை போலவே இந்த சீஸனும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டு இருக்கிறது.
இந்த வாரம் எலிமினேஷன் இருக்கும் என முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மனோபாலா தான் எலிமினேட் ஆகி இருக்கிறார்.
எலிமினேஷன் ரவுண்டில் சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா மற்றும் மனோபாலா ஆகியோர் போட்டியிட்டனர். அதில் மனோபாலா முருங்கைக்காய் தொக்கு செய்திருந்தார். அதில் காரம் அதிகம், உப்பு குறைவு என நடுவார்கள் விமர்சனம் செய்தனர்.
மூன்று பேரின் உணவுகளையும் டேஸ்ட் பார்த்த பிறகு மனோபாலா தான் எலிமினேஷன் என அறிவிக்கின்றனர். இந்த வாரம் அவருக்கு வந்த கோமாளி மணிமேகலை நைசாக அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆனார்.
மனோபாலா அதன்பிறகு பேசும்போது இந்த ஷோ பற்றி உருக்கமாக பேசினார். நான் வெளிநாட்டுக்கு சென்றால் கூட குக் வித் கோமாளி ஷோ பற்றி தான் பேசுகிறார்கள். நான் இங்கே இத்தனை உறவுகளை சேர்த்து இருக்கிறேன். Wild Card அல்லது எந்த கார்டு போட்டாலும் நான் வருவேன். இது மனோபாலாவுக்கு எண்டு இல்லை என கூறி இருக்கிறார் அவர்.