கைது செய்யப்படும் மனோஜ்.. அவரை மீட்கும் முயற்சியில் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ

By Karthick Raja Apr 26, 2026 08:27 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

அண்ணாமலையின் கையெழுத்து போட்டு பைனான்ஷியரிடம் வீட்டை மனோஜ் அடமானம் வைத்த விஷயத்தை அறிந்து அண்ணாமலை உடைந்துபோனார். இந்த கடனை முத்துவும் மீனாவும் சேர்ந்து அடைக்க முடிவு எடுத்த நிலையில், இனி இந்த வீட்டில் மனோஜுக்கு எந்த பங்கும் கிடையாது என அண்ணாமலை கூறினார்.

கைது செய்யப்படும் மனோஜ்.. அவரை மீட்கும் முயற்சியில் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ | Manoj Arrested By Police In Siragadikka Aasai

இதன்பின், ரூ. 48 லட்சம் கடனில் ரூ. 10 லட்சத்தை முத்து - மீனா தந்துவிட்டனர். இந்த நிலையில், சிந்தாமணியின் சூழ்ச்சியால் அந்த பைனான்சியர் மனோஜ் மீது புகார் அளித்துள்ளார். அதாவது, அண்ணாமலைக்கு தெரியாமல் அவருடைய கையெழுத்து போட்டு பித்தலாட்டம் செய்துள்ளார் என்கிற அடிப்படையில் இந்த புகாரை அவர் கொடுத்துள்ளார்.

புரோமோ

இதனால், போலீஸ் நேரடியாக வீட்டிற்கு வந்து மனோஜை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் இருக்கும் மனோஜை மீட்க நேரடியாக சிந்தாமணியிடம் சென்றுள்ளார் மீனா. பூ சங்க வியாபாரிகள் சங்கத்தின் தலைவராக இருக்கும் மீனா, அந்த சங்கத்தில் சிந்தாமணி மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களை வைத்து ஆக்ஷன் எடுக்க முடிவு செய்துள்ளார்.

கைது செய்யப்படும் மனோஜ்.. அவரை மீட்கும் முயற்சியில் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ | Manoj Arrested By Police In Siragadikka Aasai

விவாகரத்தில் தங்கமயில் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் சரவணன்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ

விவாகரத்தில் தங்கமயில் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் சரவணன்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ

ஒன்று மனோஜ் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை அந்த பைனான்ஷியர் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் உன் மீது இந்த புகார்களின் அடிப்படையில் ஆக்ஷன் எடுப்பேன் என சிந்தாமணிக்கு செக் வைத்துள்ளார் மீனா.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US