சமந்தா இதை உடனே நிறுத்த வேண்டும்.. பிரபல நடிகர் அட்வைஸ்
சமந்தா
நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு முழு வீச்சில் படங்களில் நடித்து வந்த நிலையில் திடீரென மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக தீவிரமாக சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார்.
மேலும் அவர் தற்போது உடலை பிட் ஆக மாற்ற தீவிரமாக ஜிம்மில் ஒர்கவுட் செய்து வருகிறார். அதன் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

ஹிந்தி நடிகர் அட்வைஸ்
சமந்தா உடன் பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் பணியாற்றிய நடிகர் மனோஜ் பாஜ்பாய் தற்போது ஒரு பேட்டியில் சமந்தாவுக்கு அட்வைஸ் செய்து இருக்கிறார்.
"சமந்தா மிக கடினமாக உழைப்பவர். அவர் physical ஆக செய்யும் விஷயங்களை பார்த்து நான் பயந்து போனேன். அவருக்கு எவ்வளவு வலிகள் கொடுத்து கொள்கிறார். அதை நிறுத்தி அவர் தன்னை தானே ஈஸியாக நடத்தவேண்டும்" என அவர் அட்வைஸ் கூறி இருக்கிறார்.
அதற்கு பதில் கூறி இருக்கும் சமந்தா "ட்ரை பண்றேன் சார்" என பதில் ட்விட் செய்திருக்கிறார்.
??? will try sir @BajpayeeManoj https://t.co/PP4h4Ly7ES
— Samantha (@Samanthaprabhu2) February 15, 2023
அயலி பட அம்மா நடிகையா இப்படி? வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்