பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா! ஜி.வி பிரகாஷ் இசையில் அதிரடி ஆரம்பம்
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிக்க உள்ளார்.
'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையம் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஜி வி பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை மார்ச் 31 அன்று 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளார்கள்.
பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
இயக்குநராக தனது முதல் படத்தை தயாரிப்பதற்காக சுசீந்திரனுக்கு நன்றி தெரிவித்துள்ள மனோஜ் பாரதிராஜா, இயக்குனர் மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது அதனையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார்.
இப்படம் அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் இத்திரைப்படம் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் ஜி வி பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
