மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. அவரும் ஒரு நடிகை தான்
மனோஜ் பாரதிராஜா
நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜாவின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு காரணமாக 48 வயதில் உயிரிழந்துள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான இவர் 'தாஜ்மகால்' படம் மூலம் 1999ல் ஹீரோவாக அறிமுகமானார். சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வர்ஷமெல்லாம் வசந்தம் என தொடர்ந்து படங்கள் நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பின் வாய்மை, ஈஸ்வரன், மாநாடு போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும் 'மார்கழி திங்கள்' எனும் திரைப்படத்தை கடைசியாக இவர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனோஜ் பாரதிராஜாவின் மனைவி
நடிகர் மனோஜ் பாரதிராஜா கடந்த 2006ம் ஆண்டு நந்தனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடிகையாக வலம் வந்தவர் நந்தனா. திருமணத்திற்கு பின் இவர் சினிமாவில் நடிக்கவில்லை. நட்சத்திர ஜோடியாக மனோஜ் - நந்தனாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
https://ripbook.com/manoj-bharathiraja-67e4184d27374/post-tribute
இந்த நிலையில், நடிகர் மனோஜ் தனது மனைவி மற்றும் மகள்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..