திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்..
மன்சூர் அலிகான்
திரையுலகில் பிரபலமான வில்லன் நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். இவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இதில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். இதனால் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார். பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் சுயேட்சை வேட்பாளராக நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில், திடீரென நடிகர் மன்சூர் அலிகானுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அவரை வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது மன்சூர் அலிகானுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
