பிக் பாஸுக்கு இந்த நடிகர் வருகிறாரா? வந்தால் வீட்டில் கலவரம் தான்
பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6 போட்டியாளராக யாரெல்லாம் வருகிறார்கள் என குறிப்பிட்டு ஒரு லிஸ்ட் கடந்த சில தினங்களாக இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதில் மைனா நந்தினி, ரச்சிதா மஹாலக்ஷ்மி, ஜிபி முத்து, சத்யா சீரியல் ஆயிஷா, மதுரை முத்து, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் அந்த லிஸ்டில் இருக்கிறது.
பிரபலங்கள் மட்டுமின்றி சில பொதுமக்களும் பிக் பாஸ் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள் என கமல் தெரிவித்து இருக்கிறார்.
இன்னும் மூன்றே நாட்களில்.. #3DaysToGo for the #GrandLaunch of #BiggBossTamil6 - வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. @ikamalhaasan @preethiIndia @NipponIndia #VijayTelevision pic.twitter.com/YNLGa13WOT
— Vijay Television (@vijaytelevision) October 6, 2022
மன்சூர் அலி கான் வருகிறாரா?
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலி கானிடம் விஜய் டிவி தற்போது பிக் பாஸுக்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரம் அவர் விஜய் டிவியின் ராஜு வூட்ல பார்ட்டி ஷோவுக்கு வந்து செம அட்ராசிட்டி செய்தது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் ஜெயித்தபின் சினிமாவில் போய் எதாவது பண்ணு என ராஜூவை அவர் உருட்டு கட்டையால் அடித்தது தான் ஹைலைட்.
அவர் ஒருவேளை பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தால் நிச்சயம் entertainment ஒருபக்கம் கிடைக்கும் என்றாலும் இன்னொரு பக்கம் கலவரமே நடக்கும் எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
மன்சூர் அலி கான் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Also Read: இந்த ட்விஸ்ட் எதிர்பார்கலையே.. அதிர்ந்து போன கோபி! பாக்கியலட்சுமி புது ப்ரொமோ