லியோ படத்தில் நடிக்க மன்சூர் அலி கான் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
மன்சூர் அலிகான்
லோகேஷ் கனகராஜுக்கு திரையுலகில் மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். இதை அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
ஏன் கைதி படமே முதலில் மன்சூர் அலிகானுக்காக தான் லோகேஷ் கனகராஜ் எழுதினார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால், அந்த படத்தில் கார்த்தி திடீரென உள்ளே வந்ததால், அவருக்காக சில மாற்றங்களை செய்து கார்த்தியை வைத்து கைதி படத்தை எடுத்தார் லோகேஷ்.
ஆனால், கண்டிப்பாக மன்சூர் அலிகானை வைத்து படம் பண்ணுவேன் என லோகேஷ் பல பேட்டிகளில் கூறிக்கொண்டே இருந்தார். அதை லியோ படத்தில் செய்தும் காட்டினார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
மன்சூர் அலி கான் சம்பளம்
இந்நிலையில், லியோ படத்தில் நடிப்பதற்காக மன்சூர் அலிகான் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க ரூ. 40 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
