மன்சூர் அலி கான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.. வன்மையாக கண்டித்த தென்னிந்திய நடிகர் சங்கம்
மன்சூர் அலி கானின் சர்ச்சை பேச்சு
நடிகை திரிஷா குறித்து மோசமான வகையில் மன்சூர் அலி கான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்து நடிகை திரிஷா பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன்பின் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்ராஜ், மாளவிகா மோகனன், குஷ்பூ, சாந்தனு, அர்ச்சனா கல்பாத்தி, சின்மயி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
கண்டித்த நடிகர் சங்கம்
இந்நிலையில், தற்போது தென்னிந்திய நடிகர் சங்கமும் இதற்கான கண்டனத்தை தெரிவித்துள்ளது. மூத்த நடிகர் மன்சூர் அலி கான் நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர் சங்கத்தின் இந்த முடிவுக்கு பின் நடிகர் மன்சூர் அலி கான் செய்யப்போவது என்ன என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். இதோ அந்த அறிக்கை.