செம்பரம்பாக்கம் மீன் வீடு தேடி வருது.. கார் மீது அமர்ந்து மன்சூர் அலி கான் பேசிய வீடியோ
நடிகர் மன்சூர் அலி கான் எப்போதும் காமெடியாக பேசும் அடிக்கடி வைரல் ஆவதுண்டு. அப்படி அவர் திரிஷா பற்றி முன்பு பேசியது பெரிய சர்ச்சை ஆனது.
தற்போது சென்னை வெள்ளம் பற்றி மன்சூர் அலி கான் பேசி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
எல்லாம் ஏரி ஆக்ரமித்து கட்டிட்டாங்க..
அரும்பாக்கத்தில் இருக்கிறேன். 100 மீட்டர் தூரத்தில் கூவம் ஆறு இருக்கிறது. டேம் தண்ணி திறந்துவிட்டால் தண்ணீர் வந்துவிடும். ஒண்ணுமே பண்ண முடியாது.
எல்லாரும் தாழ்வா கட்டிட்டாங்க. நான் கொஞ்சம் உயரமாக கட்டியதால் தப்பிவிட்டேன். ஆனா மீன் வீட்டுக்குள்ள வந்துடுச்சு. செம்பரம்பாக்கம் மீன் வீடு தேடி வருவது மிகப்பெரிய அதிசயம். வறுத்து சாப்பிட்டது போக மிச்சம் கொஞ்சம் மீன் இருக்கு. இனி பொறிச்சி சாப்பிடணும்.
எல்லாத்துக்கும் கார்ப்பரேஷன் மற்றும் கவமென்ட்டை குறை சொல்லிட்டு இருக்க முடியாது. பல இடங்களில் ஏரியை ஆக்ரமித்து கட்டப்பட்டு இருப்பதால் இந்த வேதனையை தாங்க வேண்டியதாக இருக்கு.
இவ்வாறு மன்சூர் பேசி இருக்கிறார். வீடியோ இதோ..
"Actor Mansoor Ali Khan's video" #MansoorAliKhan #chennaicyclone #ChennaiRains2023 #ChennaiFlood #Chennai #cineulagam pic.twitter.com/AwljyWRfkw
— Cineulagam (@cineulagam) December 7, 2023

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
