கொரோனாவால் மறைந்த நடிகர் மாறன் நடித்த கடைசி திரைப்படம் எது தெரியுமா? பிரபல இயக்குனர் வெளியிட்ட பதிவு
48 வயதாகும் மாறன் கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்தார். இதனால் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் அவரின் மறைவு குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் கில்லி படத்தில் ஆதிவாசி கதாபாத்திரத்திலும், வேட்டைக்காரன் படத்தில் விஜய்யின் நண்பராகவும் நடித்ததன் மூலம் இவர் புகழ் பெற்றார். தலைநகரம் படத்தில் வடிவேலு சொல்லும் நானும் ரவுடிதான் நகைச்சுவை காட்சி இவரை பெரிதும் பிரபலப்படுத்தியது.
இவர் தற்போது சர்பட்டா பரம்பரை படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் பா. ரஞ்சித் அவரின் மறைவு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடக்க முடியாத துயரம்..எப்போதும் கட்டுகடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தை கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா!! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை!! நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள் !! pic.twitter.com/ZuS2EF2u8c
— pa.ranjith (@beemji) May 12, 2021