மார்கோ: திரை விமர்சனம்
உன்னி முகுந்தன் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி இருக்கும் மார்கோ திரைப்படத்தின் விமர்சனம் குறித்து பார்ப்போம்.
கதைக்களம்
மார்கோவும், அவரது அண்ணனும் தங்கக்கடத்தல் தொழிலில் உள்ளனர்.
அதே போல் கடத்தல் தொழிலில் உள்ள நபர் தனது சகோதரரை கொலை செய்ததை மார்கோவின் தம்பி கண்டுபிடிக்கிறார்.
இதனால் அவரும் கொல்லப்பட பின்னர் பழி வாங்கும் படலாமாக மார்கோ களத்தில் இறங்குகிறார்.
அடுத்து நடக்கும் ரத்தக்களரியான சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
ஆங்கிலப்படமான ஜான்விக் போல ஆக்ஷன் படத்தை கொடுக்க வேண்டும் என இயக்குநர் நினைத்தை காட்சிக்கு காட்சி ரத்தம் தெறிப்பதில் பார்க்க முடிகிறது.
உன்னி முகுந்தன் மிரட்டலான ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.
ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் சிரத்தை எடுத்து அதக்களம் செய்திருக்கிறார். குறிப்பாக, இடைவெளிக்கு முன் வரும் சண்டைக்காட்சி மிரட்டலின் உச்சம்.
முதல் பாதிவரை ஒரு கதை சென்று இடைவேளையில் வேறொரு தளத்திற்கு நகர்கிறது. இதனால் கதை வேண்டாம், ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் இருந்தால் போதும் என இயக்குநர் நினைத்தாரோ என்று தோன்றுகிறது.
சித்திக் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். அதேபோல் இளைய சகோதரராக வரும் பார்வையற்ற நபரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கிளைமேக்ஸ் காட்சிகள் ஆங்கில படங்களை மிஞ்சிவிட்டன.
அவ்வளவு ரத்தம் தெறிக்கிறது. கண்டிப்பாக இலகிய மனம் கொண்டவர்கள், குழந்தைகளுக்கு இப்படம் ஏற்றதல்ல.
சென்சார் போர்டு எப்படி கொடூரமான காட்சிகளுக்கு அனுமதி அளித்தது என்று தெரியவில்லை.
கேமரா ஒர்க், ரவி பஸ்ரூரின் பின்னணி இசை சிறப்பு.
க்ளாப்ஸ்
ஆக்ஷன் காட்சிகள்
பின்னணி இசை
கேமரா ஒர்க்
பல்ப்ஸ்
அதீத வன்முறை
கதை
மொத்தத்தில் சண்டைக்காட்சிகளுக்காக மட்டுமே படம் பார்ப்பவர்களுக்கு இப்படம் செம ட்ரீட்.
ரேட்டிங்: 2.5/5