விண்ணைத்தாண்டி வருவாயா போன்று ஒரு படம்.. மாரி செல்வராஜ் அதிரடி முடிவு
மாரி செல்வராஜ்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடி எடுத்து வைத்தார்.
அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, கர்ணன், மாமன்னன் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். சமீபத்தில், தன் உண்மை வாழ்க்கை சம்பவத்தை வைத்து வாழை என்ற படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. தற்போது, துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
மாரி செல்வராஜ் அதிரடி
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா' படம் போன்று ஒரு படத்தை இயக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில், " என்னிடம் காமெடி தொடர்பாக படம் எடுக்க தற்போது எந்த கதையும் இல்லை. ஆனால் என் மனைவி என்னிடம் காதல் தொடர்பான படம் ஒன்றை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
எந்த ஒரு சமூக அர்ப்பணிப்பும் இன்றி, முழுக்க முழுக்க விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற காதல் சார்ந்த படமாக அது இருக்க வேண்டும் என்றார். கண்டிப்பாக இது போன்று ஒரு படத்தை எடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
