லியோவை பாராட்டியாதால் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு குவியும் எதிர்ப்பு.. காரணம் இதுதானா
மாரி செல்வராஜ் வாழ்த்து
கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள லியோ படம் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.
மேலும் படத்தை பார்த்த திரையுலக நட்சத்திரங்கள் தங்களுடைய பாராட்டுகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல முன்னணி இயக்குனர் மாரி செல்வராஜ் லியோ படத்தை பாராட்டி வாழ்த்து ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் எதிர்ப்பு
இதை கவனித்த ரசிகர்கள் மாரி செல்வராஜ் வெளியிட்ட பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். லியோ படத்தில் மிஸ்கின் கதாபாத்திரம் பன்றிகளை வளர்க்கும் ஒருவரை போல் காட்டிருப்பார்கள். ஆனால், அதே மிஸ்கின் தான் கொலை, கொள்ளைகளை செய்யும் ஆளாகவும் படத்தில் இருப்பார்.
மாமன்னன் படத்தில் பன்றிகளை வைத்து கதைக்களத்தை உருவாக்கிய மாரி செல்வராஜ் எப்படி, லியோ படத்தை பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார் என கோபத்துடன் கூறி வருகிறார்கள். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
பன்னி கூட்டத்து மேல பாசம்
— ந᭄ஷ்மா ᴹᴵ ™ (@its_Nishma2) October 21, 2023
இல்லையா ? https://t.co/K8VCBuHl94