வெளிவந்தது மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் படத்தின் மாஸ் அப்டேட்.. ரிலீஸ் எப்போ தெரியுமா
மாரி செல்வராஜ்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடி எடுத்து வைத்தார்.
அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, கர்ணன், மாமன்னன் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார்.
சமீபத்தில், தன் உண்மை வாழ்க்கை சம்பவத்தை வைத்து வாழை என்ற படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
தற்போது இவர் துருவ் விக்ரம் நடிப்பில் 'பைசன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.
பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
மாஸ் அப்டேட்
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடியான அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்றுடன் நிறைவடைய இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
