பிடிக்காமல் தாலி கட்டினேன்..தன் திருமணம் பற்றிய ரகசியத்தை உடைத்த பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ்
இயக்குனர் மாரி செல்வராஜ்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்.
அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, கர்ணன், மாமன்னன் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார்.
சமீபத்தில், தன் உண்மை வாழ்க்கை சம்பவத்தை வைத்து வாழை என்ற படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ்.
அந்த படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல், பல நட்சத்திரங்கள், இயக்குனர்கள் என அனைவரும் இந்த படத்தை பாராட்டினர்.
செல்வராஜின் திருமண ரகசியம்
இந்த நிலையில், வாழை படம் குறித்தும், தன் திருமண சீக்ரெட் குறித்தும் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.
அதில், "எனக்கு பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடிக்கும் அதற்கு முக்கிய காரணம் நான் இன்னும் பழைய நினைவுகளை நினைத்து கொண்டு தான் இருக்கிறேன்.
புதியதாக வாழ ஆரம்பிக்கவில்லை அவ்வாறு நான் புதிதாக வாழ்கிறேன் என்றால், அது என் பிள்ளைகளோடு வாழும் வாழ்க்கைதான்.
மேலும், என் மனைவி திவ்யாவை நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனக்கும், என் மனைவிக்கும் தாலிக்கட்டி திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை.
ஆனால், என் மாமியார் தாலிக்கட்டித்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார்கள்.
அதனால் விருப்பம் இல்லாமல் தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டேன், என்னை பொறுத்தவரை இருமனங்கள் இணைந்தால் போதாதா எதற்கு இந்த திருமணம் என்பது என் எண்ணம்" என்று கூறியுள்ளார்.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
