தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் வரலாற்று படம்! தள்ளிப்போக உண்மை காரணம் இதுதான்
நடிகர் தனுஷ் தற்போது படங்களில் நடிப்பதை தாண்டி சொந்தமாக படங்களை இயக்குவதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
அவர் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் கூட்டணி சேர்ந்து ஓரு படத்தில் நடிக்க இருப்பதாக முன்பே தகவல் வந்தது.
2 வருடம் ஆகும்
இந்த படம் பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் மாரி செல்வராஜ் பேசி இருக்கிறார். "இது ஒரு பெரிய வரலாற்று படம். என்னுடைய கனவு படம்."
"அதை தொடங்கினால் குறைந்தது ஒன்றரை வருடமாவது ஆகும். ஷூட்டிங் தொடங்கும் முன்பு 6 மாதம், இன்னொரு ஆறு மாதம் ஷூட்டிங், அதன் பின் 6 மாதம் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் என தொடங்கிய இரண்டு வருடம் கழித்து தான் ரிலீஸ் செய்ய முடியும்."
"இவ்வளவு காலம் எடுக்கும் என்பதால் தான் இந்த ப்ரொஜெக்ட் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது" என மாரி செல்வராஜ் கூறி உள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
