அழுத்தமான கதையை கொண்டு உருவான வாழை படம் இதுவரையிலான வசூல்... பிளாக்பஸ்டர் தான்
வாழை படம்
மாமன்னன் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் வாழை.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார், மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி என பலர் நடித்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகி இருந்தது.
ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிம்பு என பலர் பாராட்டினார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் இப்படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை பாராட்டி இருந்தார்.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ. 1.15 கோடி வசூலித்திருந்தது.
அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை செய்துவந்த இந்த படம் மொத்தமாக ரூ. 32 கோடி வசூல் செய்து பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
