டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து எப்படி இறந்தார்.. இறுதி நிமிடம் குறித்து பேசிய எதிர்நீச்சல் நடிகர், மனமுடைந்த இயக்குனர்
மாரிமுத்து
எதிர்நீச்சல் வில்லன் ஆதி குணசேகரன் ரோலில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார்.
இறுதி நிமிடம்
எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த நடிகர் மாரிமுத்துவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக டப்பிங் அறையில் இருந்து வெளிய வந்த மாரிமுத்து உடனடியாக தனது காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அதன்பின் அவருடைய மகளை தொடர்பு கொண்டதன் பிறகு தான் விவரம் என்னவென்று தெரிந்தது என எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவின் தம்பியாக நடித்து வரும் நடிகர் கமலேஷ் கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் திருச்செல்வம் கூறுகையில் :
"நடிகர் மாரிமுத்து மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. நாங்கள் இன்று சீரியல் ஷூட்டிங்கிற்கு தயாராகி கொண்டிருந்தோம். ஆனால் அவருக்கு இன்று சூட்டிங் இல்லை என்பதால் டப்பிங் பேசிவிட்டு வருவதாக கூறியிருந்தார்".
"ஆனால் அதற்குள் அவருக்கு இப்படி ஆகிவிட்டது. இது எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகிற்கே இழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்லுவதென்று தெரியவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் கூட ஜீரணிக்கலாம், ஆனால் அவர் நன்றாக இருந்தார்" என பேசியுள்ளார்.
சினிமாவிற்காக சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்த மாரிமுத்து தனது இறுதி நிமிடங்களை கூட சினிமாவிற்காகவே செலவளித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
