மாரிமுத்துவின் கடைசி நிமிடம், படப்பிடிப்பில் நடிகர் எப்படி?- எதிர்நீச்சல் சீரியல் குழுவினரின் சோகமான பதிவுகள்
மாரிமுத்து
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தேனியில் இருந்து வந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆரம்பத்தில் இருந்து எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு முன்பு வரை அவருக்கு அங்கீகாரம் கொடுக்கும் அளவிற்கு எந்த படமும் அமையவில்லை.
உதவி இயக்குனர், இயக்குனர், நடிகர் என முன்னேறிய அவருக்கு எதிர்நீச்சல் சீரியல் பெரிய வரவேற்பை கொடுத்தது. அதன் காரணமாகவே அவருக்கு ஜெயிலர், இந்தியன் 2, கங்குவா என பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
பல வருட போராட்டத்திற்கு பிறகு சினிமாவில் ஜெயித்துவந்த மாரிமுத்து வாழ்க்கை இன்றோடு முடிந்துவிட்டது, இது அனைவருக்குமே மிகவும் வருத்தத்தை கொடுத்துள்ளது.
கடைசி போன்
மாரிமுத்து அவர்களின் இறப்பால் கடும் துக்கத்தில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் புகழ் திருச்செல்வம் பேசுகையில், மருத்துமவனையில் நீண்டநாள் முடியாமல் இருந்து இறந்திருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் இப்படியொரு விஷயத்தை நாங்கள் எதிர்ப்பார்க்கவே இல்லை.
இன்று காலை படப்பிடிப்பிற்காக தயாராகிக் கொண்டிருந்தோம் அவரிடம் போன் செய்து கேட்டபோது ஒரு படத்தின் டப்பிங்கில் இருக்கிறேன் அதை முடித்துவிட்டு படப்பிடிப்பிற்கு வருகிறேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் எதிர்ப்பாராத விதமாக அவருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என சோகமாக பேசியுள்ளார்.
அதேபோல் எதிர்நீச்சல் சீரியலில் அவருடன் நடித்த பிரபலங்களும் இன்ஸ்டாவில் சோகமான பதிவுகளை போட்டுள்ளனர்.

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
