தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன்பே கடைசியாக செல்பி எடுத்த மாரிமுத்து- வைரலாகும் புகைப்படம், ரசிகர்கள் சோகம்
நடிகர் மாரிமுத்து
வெள்ளித்திரையில் பல வருடங்களாக இருந்தாலும் நடிகர் மாரிமுத்துவிற்கு பெரிய ரீச் கொடுத்தது என்றால் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் தான்.
இதில் இவர் இந்தாம்மா ஏய் கூறுவது ஒரு டிரண்டாகவே வலம் வந்தது. சீரியலுக்காக ஆணாதிக்கம் கொண்ட நபராக நடித்து பல பெண்களின் கோபத்திற்கு ஆளானார் என்றே கூறலாம்.
அப்பத்தா 40% சொத்து எனது பங்கு என்று கூறி குணசேகரனை கோபப்படுத்த அவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என ரசிகர்கள் ஆவலாக பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் நடிகர் மாரிமுத்துவின் மரண செய்தி வந்து அனைவருக்கும் பெரிய ஷாக் கொடுத்துள்ளது.

நடிகரின் செல்பி
மாரிமுத்து எதிர்நீச்சல் தொடரை தாண்டி ஜெயிலர், இந்தியன் 2, கங்குவா மற்றும் சிறு பட்ஜெட் படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் மாரிமுத்து நடித்த ஒரு படம் தான் விழா நாயகன்.
கடைசியாக மாரிமுத்து கலந்துகொண்ட படப்பிடிப்பும் இந்த படத்திற்காக தானாம். இந்த படத்தில் தன்னுடைய புகைப்படம் அடங்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் மாரிமுத்து செல்பி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படத்திற்காக வைக்கப்பட்ட போஸ்டர் இப்போது நிஜமாகவே நடந்து விட்டதே என வருத்தம் அடைந்து வருகிறார்கள்.

கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri