தாறுமாறு வசூல் வேட்டையில் நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி- இதுவரை இத்தனை கோடி வசூலா?
மார்க் ஆண்டனி
அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா படங்களால் கொஞ்சம் தோல்வியை தழுவிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.
விஷால், எஸ்.ஜே.சூர்யா என பலர் நடித்துள்ள இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
படக்குழுவும் படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளனர். ரூ. 60 கோடி பட்ஜெட்டில் மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
செப்டம்பர் 15 தேதி திரைக்கு வந்த மார்க் ஆண்டனி 4 நாட்களில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி இருந்தது.
பட வசூல்
நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்து வர இதுவரை உலகம் முழுவதும் படம் ரூ. 73 கோடி மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

24 மணி நேரத்தில் 10 படுகொலைகள்; கொலைக்களமாக மாறிய தமிழ்நாடு - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu
