ஆறு நாட்களில் மாபெரும் சாதனை படைத்த மார்க் ஆண்டனி வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
மார்க் ஆண்டனி
பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த கடந்த வாரத்தில் இருந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி.
ஹீரோவாக விஷால் சிறப்பாக நடித்திருந்தாலும், தன்னுடைய வில்லத்தனத்தால் அனைவரையும் கவர்ந்த படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக மாறினார் எஸ்.ஜே. சூர்யா.
இப்படத்தின் வெற்றிக்குப்பின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மேல் ரசிகர்கள் வைத்திருந்த பார்வை அப்படியே வேறுவிதமாக மாறியுள்ளது.
வசூல்
முதல் நாளில் இருந்தே மார்க் ஆண்டனி படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், ரூ. 50 கோடியை கடந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், இப்படம் வெளிவந்து ஆறு நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 66 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது கூறப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் நல்ல வரவேற்பு இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri
