மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடி வசூல் செய்ததா மார்க் ஆண்டனி.. செம மாஸ்
மார்க் ஆண்டனி
கடந்த வாரம் வெளிவந்து வேற லெவல் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்து வெளியான இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
குறிப்பாக இப்படத்தின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எஸ்.ஜே. சூர்யா. தனது வில்லத்தனத்தில் நகைச்சுவையை கலந்து அவர் நடித்த நடிப்பு திரையரங்கை தெறிக்கவிட்டது.
வசூல்
உலகளவில் எதிர்பார்த்ததை விட வசூலில் உச்சதொட்டுள்ள மார்க் ஆண்டனி படம் இதுவரை தமிழில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மார்க் ஆண்டனி படம் வெளிவந்து மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 26 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
கண்டிப்பாக இந்த வாரமும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
