விஷாலின் திரை வாழ்க்கையில் நம்பர் 1 படம் மார்க் ஆண்டனி தான்.. தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடி வசூல்
விஷால்
இரும்புத்திரை படத்திற்கு பின் நடிகர் விஷாலின் பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு படம் வரவில்லை என்று தான் ரசிகர்களின் கருத்தாக இருந்தது.
அதை சுக்குநூறாக உடைத்து மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார் விஷால். ஆம், மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலின் கெரியருக்கு சூப்பர் மைலேஜ் கொடுத்துள்ளது.
எந்த அளவிற்கு என்றால் இதுவரை விஷாலின் திரை வாழ்க்கையில் எந்த ஒரு திரைப்படமும் செய்தா வசூல் சாதனையை எல்லாம் மார்க் ஆண்டனி செய்து வருகிறது.
உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகத்தில் விஷால் படத்திற்கு இதுவரை கிடைத்திராத வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவே விஷால் கெரியரில் நம்பர் 1 என கூறப்படுகிறது.
தமிழக வசூல்
இந்நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் வெளிவந்த ஆறு நாட்கள் ஆகியுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை மட்டுமே ரூ. 37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த வாரம் பெரிதும் படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லாத காரணத்தினால் கண்டிப்பாக மார்க் ஆண்டனி திரைப்படம் இந்த வாரம் இறுதிக்குள் தமிழநாட்டில் மட்டுமே ரூ. 50 கோடியை கடந்து வசூல் செய்ய அதிக வாய்ப்புகள் என்கின்றனர். அது நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
