இரண்டு நாட்களில் மார்க் ஆண்டனி செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா..
மார்க் ஆண்டனி
விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்து கடந்த 15ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மார்க் ஆண்டனி.
மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்தை பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

மேலும் ரிது வர்மா, YG மகேந்திரன், சுனில், செல்வராகவன், அபிநயா என பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை மார்க் ஆண்டனி பெற்று வருகிறது.
வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தி வரை விடுமுறை நாட்கள் என்பதால் கண்டிப்பாக இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிக வசூல் வரும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan