சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் பாடகி மாளவிகாவிற்கு விரைவில் திருமணம், யாருடன் தெரியுமா?- அவரே பதிவிட்ட புகைப்படம்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு நிறைய கலைஞர்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர் தான் மாளவிகா சுந்தர், இவர் பாடல்களுக்கு எப்போதும் ஒரு தனி கூட்டம் இருக்கும்.
தமிழில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்திய மாளவிகா ஹிந்தியிலும் ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பைனல் வரை வந்தார், ஆனால் அவர் வெற்றிப்பெறவில்லை.
சமீபத்தில் மாளவிகா இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் தவறாக மெசேஜ் செய்த ஒருவரை பற்றி கூறி இதுபோன்றவர்களை சும்மா விடக்கூடாது என தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
தற்போது அவர் ஒரு சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம். தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து அவரே இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டுள்ளார்.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
