மார்வல் படத்தில் முதல் இந்திய ஸ்பைடர் மேன்.. எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்
ஸ்பைடர் மேன்
உலகளவில் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்படுவது மார்வல் திரைப்படங்கள்.
அதிலும் குறிப்பாக ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. மாபெரும் அளவில் கொண்டாட்டம் இருக்கும்.
கடைசியாக வெளிவந்த ஸ்பைடர் மேன் நோ வே ஹாம் படம் கூட வசூலில் பட்டையை கிளப்பியது.

இதன்பின், தற்போது அனிமேஷன் ஸ்பைடர் மேன் திரைப்படமாக Spider-Man: Across the Spider-Verse வெளியாகவுள்ளது.
இந்தியன் ஸ்பைடர் மேன்
இந்த அனிமேஷன் ஸ்பைடர் மேன் படத்தில் இந்தியாவை சேர்ந்த ஸ்பைடர் மேன் கதாபாத்திரமும் இடம்பெறுகிறது.
பவித்ர பிரபாகர் எனும் இந்த ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் நடிகர் கரண் சோனி நடிக்கிறார். இவர் ஹாலிவுட் திரையுலகிலும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்.

இதன்மூலம் Spider-Man: Across the Spider-Verse படத்தின் மூலம் முதல் முறையாக ஒரு இந்தியன் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா