ஷாருக் கான் படத்தில் இசையமைக்கும் அனிருத் ! செம மாஸ் தகவல்..
தமிழ் சினிமாவின் டாப் இயக்குனரான அட்லீ பிளாக் பஸ்டர் படங்களை தொடர்ந்து தற்போது பாலிவுட் திரையுலகில் மாஸ் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
அதன்படி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் அடுத்த படத்தை அட்லீ இயக்கவுள்ளார், இப்படத்திற்கான ஷூட்டிங் இந்த வாரம் புனேவில் தொடங்கவுள்ளது.
மேலும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஒளிப்பதிவாளர் GK விஷ்ணு, கலை இயக்குனர் முத்துராஜ் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் அப்படத்திலும் பணியாற்றவுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ டீசர் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் அந்த டீசரில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி இப்படத்தில் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri