7 நாட்களில் மாஸ்க் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ
மாஸ்க்
ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் இளம் நடிகர் கவின். தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் மாஸ்க்.

இப்படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடித்திருந்தார். அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் சார்லி, ருஹானி ஷர்மா, பவன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில், 7 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மாஸ்க் படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மாஸ்க் படம் உலகளவில் இதுவரை ரூ. 10.5 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 8.2 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu