முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்..
மாஸ்க்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் கவின். இவர் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் மாஸ்க்.
]
இப்படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருந்தார். ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
முதல் நாள் வசூல்
நல்ல எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இந்த நிலையில், முதல் நாள் உலகளவில் மாஸ்க் படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் முதல் நாள் ரூ. 2+ கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள டீசன்ட் ஓப்பனிங் டே வசூலாக பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri