விஜய், ரஜினி என யாரும் செய்யாத சாதனையை செய்யப்போகும் அஜித்தின் வலிமை- கொண்டாட்டத்தின் உச்சத்தில் ரசிகர்கள்
அஜித்தின் வலிமை திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிதாக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஒரு படம்.
ரிலீஸ் தேதி தள்ளிப்போய் இப்போது ஒருவழியாக படத்தை பிப்ரவரி 24ம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துவிட்டார்கள். ரிலீஸ் முன்பு படம் குறித்து ஏதாவது டீஸர், டிரைலர் வெளியிடுவார்களா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் தான் படம் குறித்து நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
என்னென்ன விஷயங்கள் என்றால், வலிமை திரைப்படம் வெளிநாடுகளில் பெரிய அளவில் ரிலீஸ் ஆகிறதாம், மார்க்கெட் உள்ள இடங்களில் படம் அதிக திரையில் திரையிடப்பட இருக்கிறதாம்.
அதோடு தமிழ் சினிமாவில் முதன்முறையாக சவுதி அரேபியாவில் வலிமை படத்தின் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட இருக்கிறதாம்.
இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகரின் படத்திற்கும் இப்படி ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பானது இல்லையாம்.