பிரம்மாண்ட மாஸ்டர் செஃப் பைனல், வெற்றியாளர் இவரா?- வெளிவந்த விவரம்
இந்த வருடத்தில் தமிழ் தொலைக்காட்சிகளில் சில பிரம்மாண்ட ஷோக்கள் தொடங்கப்பட்டது. சன் டிவியில் மாஸ்டர் செப்ஃ, விஜய்யில் பிக்பாஸ் 5, ஜீ தமிழில் சர்வைவர் என இன்டர்நேஷ்னல் ஷோக்கள் தமிழில் தொடங்கப்பட்டன.
இந்த 3 ஷோக்களுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சர்வைவர் ஷோ முடிவுக்கு வர இருக்கும் நிலையில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.
14 போட்டியாளர்களில் 10 பேர் அடுத்தடுத்து எலிமினேட் ஆகி இப்போது 4 பேர் மட்டுமே மீதம் உள்ளனர். வின்னி, நித்தியா, தேவகி மற்றும் கிருத்திகா என 4 பேர் பைனலிஸ்ட் இதில் தேவகி ஜெயிக்க தான் அதிக வாய்ப்பு இருப்பதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் யார் வெற்றிப்பெறுவார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.