முதல்முறையாக தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் செய்ய போகும் சாதனை, வெளியான மாஸ் தகவல்..
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி போனது, ஆனால் அடுத்த மாதம் பொங்கல் அன்று வெளியாகும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இப்படம் U/A சென்சார் சான்றிதழ் பெற்றது என்ற புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் தற்போது ரிலீஸுக்கு தராயராகி வரும் மாஸ்டர் திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் ஆஸ்திரேலியா வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படம் முதல்முறையாக 60-திற்கும் மேற்பட்ட இடங்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு தமிழ் திரைப்படம் முதல் முறையாக அந்த நாட்டில் 60 இடங்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.