விஜய்யின் மாஸ்டர் படத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த கதாபாத்திரம்! அதில் நடித்தற்கான காரணத்தை சொன்ன நடிகை
மாஸ்டர்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர்.
பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தில் விஜய் - விஜய் சேதுபதி என இவரும் சேர்ந்து நடித்திருந்தனர். மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது.
பெரியளவில் பேசப்பட்ட இப்படம் அதிகமான விமர்சனங்களை சந்தித்தது அப்படி மாஸ்டர் திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரீயா கதாபாத்திரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
பொதுவாக கதாபாத்திரங்களுக்கு முக்கியதுவம் கொடுத்து நடிக்கும் ஆண்ட்ரீயா மாஸ்டர் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் வரும் படியான ரோலில் நடித்திருப்பார்.
இந்நிலையில் அப்படத்தில் நடித்தற்கான காரணம் குறித்து நடிகை ஆண்ட்ரீயா பேசியிருக்கிறார். அதில் விஜய் மற்றும் லோகேஷ் உடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததால் அப்படத்தில் நடித்தேன்.
மேலும் ஒரு பெண் வில்வித்தை செய்யும் காட்சியில் ஹீரோவுக்கு உதவும் படியாக வருகிறார், அது மிகவும் புதுமையான விஷயமாக இருந்தது. எனக்கு அப்படி புதியதாக முயற்சி செய்ய பிடிக்கும் என பேசியிருக்கிறார்.
பிக்பாஸ் விக்ரமன் சன் டிவியின் இந்த தொடரில் நடித்துள்ளாரா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
