மாஸ்டர் படத்தின் முக்கிய நபருக்கு கல்யாணம்! புது பொண்ணு இவர் தானாம்! அழகான குரூப் போட்டோ இதோ
மாஸ்டர் படம் வெளியாகி வசூலை அள்ளி சாதனை படைத்துவிட்டது. விஜய் மீண்டும் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னன் என்பதை நிரூபித்துவிட்டார்.
இப்படத்தில் நடித்தவர் ஒருவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்ததாக ஒரு திருமண செய்தியை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார்.
மாஸ்டர் படத்தில் எடிட்டராக பணியாற்றிய ஃபிலோமின் ராஜ் என்பவருக்கும் திவ்ய பிரதீபா என்ற பெண்ணுடன் திருமணமாகியுள்ளது.
மாஸ்டர் படக்குழுவினர் அந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி புகைப்படம் எடுத்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாநகரம் ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ள ஃபிலோ மின் ராஜ் மெஹந்தி சர்க்கஸ், ராட்சஸி ஆகிய படங்களிலும் வேலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Long time partner in crime gets hitched..?
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 4, 2021
So happy to celebrate this day with you both! @philoedit & #dhivyapradeepa
Congrats guys! ? pic.twitter.com/HX76fI8jEC