அஜித்தின் விஸ்வாசம் படத்திடம் மோசமாக தோற்ற விஜய்யின் மாஸ்டர்- TRP முழு விவரம்
தொலைக்காட்சியில் ஒரு பெரிய நடிகரின் படம் ஒளிபரப்பானால் போதும் அதன் TRP விவரங்களை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
அப்படி அண்மையில் அதாவது ஏப்ரல் 14ம் தேதி தமிழ் வருடப் பிறப்பு ஸ்பெஷலாக விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் முதன்முறையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
இதனால் ரசிகர்கள் படம் TRPயில் பெரிய சாதனை செய்யும் என எதிர்ப்பார்த்தார்கள், பழைய படங்களை முந்தி முதல் இடம் பிடிக்கும் என இருந்தார்கள்.
தற்போது விஜய்யின் மாஸ்டர் திரைப்பட TRP விவரம் வெளியாகியுள்ளது. படத்தை 17.10 ரேட்டிங் கிடைத்துள்ளது.
அஜித்தின் விஸ்வாசம் படம் 18.1 ரேட்டிங் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தொலைக்காட்சி TRPயில் அஜித்தின் விஸ்வாசம் படத்திடம் தோற்றுள்ளது தெரிகிறது.