விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டு இவ்வளவு குறைவாக தான் வசூலித்ததா?- ரசிகர்கள் ஷாக்
இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாரானது மாஸ்டர். படம் கடந்த வருடமே வெளியாக வேண்டியது.
ஆனால் கொரோனா பட ரிலீஸை தள்ளி வைத்துவிட்டது, இவ்வருட முதல் படம் திரையரங்கில் வெளியானது என்றால் இது மாஸ்டர் திரைப்படம் தான்.
வழக்கம் இப்படத்திற்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்திருந்தார்கள். வசூலும் ரூ. 200 கோடிக்கு மேல் இருந்தது.
அண்மையில் ஒரு ஆங்கில பத்திரிக்கையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 70 கோடி தான் வசூலித்துள்ளது என்று பதிவு செய்தனர்.
இதைப்பார்த்த ரசிகர்கள் படு அதிர்ச்சியாகி பல கமெண்ட்டுகள் போட்டு வந்தனர். இந்த நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது டுவிட்டர் பக்கத்தில், நான் சின்ன படங்கள் சந்திக்கும் விஷயங்கள் பற்றி தான் பேசியிருந்தேன். மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸ் குறித்து எதுவும் பேசவில்லை.
மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 140 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது என்று கூறியுள்ளார்.
Folks my quote in this article is about challenges faced by small films. I haven't commented about the box office collections of any film.
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) April 15, 2021
On box office collections mentioned, there's a mistake on #Master. It should be above 140 crore in TN. Stop debating on its big success✍️? pic.twitter.com/5b5wuQclWf