காப்பியடித்து கதாபாத்திரத்தை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ்..! எதிர்பார்ப்பில் லியோ
லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமாகி கைதி படத்தின் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ்.
இதன்பின் விஜய்யுடன் கைகோர்த்த இவர் மாஸ்டர் எனும் படத்தை இயக்கி, விஜய்யின் கேரியரில் இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜய்யை நடிக்க வைத்திருந்தார்.
முழு நேர குடிகாரனாக நடித்திருந்த விஜய் ரசிகர்களின் கண்களுக்கு புதிதாக தெரிந்தார். அவருடைய கதாபாத்திர பழக்கவழக்கம் கூட முற்றிலும் புதிதாக இருந்தது.
காப்பியா?
இந்நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய் நடித்த இந்த கதாபாத்திரத்தில் ஹாலிவுட் படத்தில் இருந்து தான் லோகேஷ் காப்பியடித்துள்ளார் என கூறப்படுகிறது.
ஹாலிவுட்டில் ஜானி டெப் நடித்து 2018ஆம் ஆண்டு வெளிவந்த the professor படத்தில் இடம்பெறும் ஜானி டெப்பின் கதாபாத்திரம் கூட கல்லூரியில் வேலை பார்க்கும் professor முழு நேர குடிகாரனாக தான் இருப்பார்.
இதை கவனித்த நெட்டிசன்கள் சிலர் the professor படத்தில் வரும் ஜானி டெப்பின் கதாபாத்திரத்தை காப்பியடித்து தான் மாஸ்டர் படத்தில் விஜய் கதாபாத்திரத்தை லோகேஷ் உருவாக்கியுள்ளார் என கூறுகின்றனர்.
இதனால் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் இப்படி ஆகிவிடுமோ என்றும் தற்போதே பேச்சு எழுந்துவிட்டது.
கீர்த்தி சுரேஷா இப்படி? தாராள கவர்ச்சி காட்டி போட்டோஷூட்

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
